1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின்

கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக காஞ்சன விஜேசேகர கூறினார்.

மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகி உள்ளதாகவும் ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கட்டணம் வசூலிப்பதால், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க முடிந்தது என்றும் மின் உற்பத்தி திட்டத்தை செயற்படுத்தினால், ​​டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனகாஞ்சன விஜேசேகர கூறினார்.

இதேவேளை, உடன் முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி