1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த வாரத்திற்குள் 100 மில்லியன் ரூபாய் கிடைக்காவிட்டால் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை

நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் அந்த தொகையாவது தேவைப்படுவதாக அதன் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 1100 மில்லியன் ரூபாயாகும்.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்கக் கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அமைச்சின் செயலாளரும் இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணம் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தை, நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு eிதி ஒதுக்கீடு செய்வதற்கு தனது அனுமதி போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அங்கீகாரம் தேவை என நிதி அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக கடந்த 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நித தடுத்து நிறுத்தப்படடக்கூடாது என நிதியமைச்சின் செயலாளருக்கு சட்ட மா அதிபருக்கும் உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி