1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர்

இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதி இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, மறுசீரமைப்புத் திட்டமும் நடைமுறையில் இருப்பதால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது, அதன் பின்னரே மதிப்பீடும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்
எவ்வாறாயினும், வரிக் கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன்; ஒப்புக் கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் உள்ளன, அவற்றைத் தாண்டி அரசாங்கத்தினால் செயல்பட முடியாது. ஒப்பந்தங்களை மீறினால் அது அடுத்த தவணை நிதியுதவிகளைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவளை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான முதல் தவணையை இந்த மாத இறுதிக்குள் அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி