1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.



இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 353.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 333.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி