1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை

கட்டுப்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, கல்வி, சுகாதாரம், அவ்வாறான பல முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பாவனை என்பது நாடு தழுவிய ரீதியில் எங்களுடைய மக்களை அதிலும் குறிப்பாக இளம் சமூகத்தினரை பாதிக்கும் விடயமாகின்றது. நாங்கள் அதற்கு முன்னுரிமையளித்து அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பிலும், அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். அதன் முன்னுற்றங்கள் குறித்து 2 வாரங்களில் கூற இருக்கின்றோம்.

அதேவேளை, நாடு தளுவிய ரீதியில் அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட காலங்களிற்கு குறிப்பிட்ட தொகை அரிசியை வினியோகிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒரு கிலோ நெல்லை 100 ரூபா கொடுத்து வாங்குமாறு கூறியிருந்தார். ஏற்கனவே 60 ம்றும் எழுபது றூபாவிற்கு வாங்கும் நிலைமையே இருந்தது. 100 ரூபாவாக அறிவிக்கபடப்டதன் பின்னர் தனியாரும் அந்த விலைக்கு பெற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயரத்து 832 கிலோ நெல்லு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்து 171 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களிற்கு அவை கொடுக்கப்படும்.

அதேவேளை இந்த பிரதேசத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலமான மின் திட்டங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்த பிறகு, சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.

அத்திட்டத்தினடிப்படையில் எப்பகுதியில் அது உற்பத்தியாக்கப்படுகின்றதோ, அப்பகுதி மக்களிற்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தையும், குறைந்த விலையில் வழங்கும் ஏற்பாடும் ஒ்ன்று செய்யப்பட்டு வருகின்றது. அதைவிட அந்த முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி அப்பகுதி மக்களிற்கு நீடித்த, நிலையான, கௌரவமான வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவற்றைவிட எல் ஆர் சியின் காணி பங்கீடு சம்மந்தமாகவும், அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் மற்றும் சட்டவிரோத மண்ணகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார், அன்று இருந்த புலிகள் இயக்கத்தால் தங்களுடைய சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்த படகுகளை இங்கு இலகுவாக வந்து தொழில் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.

அதே நேரத்தில் எங்களுடைய கடற் தொழிலாளர்கள் அன்றைக்கு கடலில் இறங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று எமது கடற் தொழிலாளர்கள் கடடிில் இறங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற வேளையில், மீண்டும் இந்திய இழுவைப்படகுகளுடைய எலலை தாண்டிய, அத்துமீறிய சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றபடியினால், எங்களுடைய வழங்கள் அழிக்கப்படுகின்றது.

எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகின்றது. கடல் உபகரணங்கள் அழிவிற்குட்படுத்தப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகின்றபொழுது, எங்களுடைய கடற்தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு, ராஜதந்திர ரீதியாக நடபுரீதியாக மற்றும் சட்ட ரீதியாகவெல்லாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தோம். இருந்தும் அது பூரணமான பயனைத் தரவில்லை. மேற்கொண்டு ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கின் அதேவேளை, சட்ட ரீதியான நடவடிக்கைக்கூடாக அரசுமடையாக்கப்பட்ட இந்திய படகுகளை எங்களுடைய கடற் தொழிலாளர்களிற்கு கொடுத்து, அவர்களை அந்த தொழிலில் ஈடுபட வைத்திருக்கின்றோம்.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான எங்களுடைய சிறிய படகுகளில் சென்று, அங்கிருந்து பாரிய படகுகளில் தொழிலிற்காக வருகின்றவர்களை தடுத்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும் நான் கேட்டிருக்கின்றேன்.

ஏனென்றால், இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கை என்று எடுக்கின்றபொழுது, வேறு விதமாக சித்தரிக்கப்படுகின்றது. அதாவது, தாங்கள் தொழில் செய்கின்றபொழுது சிங்கள கடற்படையினர் அல்லது சிங்கள இராணுவத்தினர் வந்து தாக்குவதாகவும், கைது செய்வதாகவும் கூறப்படுகின்றது.

இந்திய மக்களிற்கு ஒரு தவறான படம் காட்டப்படுகின்றது. ஆனபடியால், எமது பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று அதை தடுக்கின்ற பொழுது அல்லது கடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தெ்னிந்திய மக்களிற்கும், இந்திய மக்களிற்கும் சரியான செய்தி போய் கிடைத்து அந்த தொழிலை அவர்கள் இலகுவாக நிறுத்துவார்கள் என்று நம்புகின்றேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி வரைவாக புது டெல்லி செல்ல இருக்கின்றார். அங்கும் எங்களுடைய கடற்தொழிலாளர்களது பிரச்சினையை அதிலும் தீர்வு காணுவார் என்று நம்புகின்றேன் என தெரிவித்தார்.

ஆர்பாட்ட நேரத்தில் கண்ணீர் புகை வீசப்பட்டு இருவர் உயிரிழந்தது தொடர்பில் இதன்போது ஊடகவிலாளர் வினவினார், அவை எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என்று எனக்கு தெரியாவிட்டாலும், அப்படி சில சம்பவங்கள் நடந்ததாக அதாவது இந்த தாக்குதலில் தகவல்கள் கிடைத்தது. அது தொடர்பாக ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி