1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்

அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும்.

பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கும்.

இது மக்களின் வாழ்க்கைக்கு உதவும். சந்தை தேவை மற்றும் பிற காரணிகளை பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, ​​அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி