1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேச பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினத்தில் அந்த சங்கத்தின் தலைவரான கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.



 எமது மக்களிடையே கருத்து ரீதியான மாற்றம் தேவை. புதிய தலைமுறை சிஸ்டம் சேஞ்ச் என்று இதற்கு நிகரான ஒன்றையே கேட்கின்றனர். இதனை அரசாங்கமோ, பாராளுமன்றமோ தனியாகச் செயற்படுத்த முடியாது. அதற்காக முழு நாடும் ஒன்று திரள வேண்டும்.

 IMF பரிந்துரைத்த விடயங்களை அவர்கள் பரிந்துரைப்பதற்கு முன்பே, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆரம்பத்திலேயே இவற்றை அவதானித்து இருந்தால் , இதுபோன்று நெருக்கடியில் சிக்கி தவிக்க நேர்ந்திருக்காது
என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். காலம் சென்ற தேச பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினத்தை முன்னிட்டு 22.03.2023 அன்று நடைபெற்ற விழாவின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

டி.எஸ்.சேனநாயக்க நினைவு குழுவின் தலைவர் என்ற வகையில், அங்கு வருகைதந்திருந்த அனைவரையும் மரியாதையுடன் வரவேற்ற அவர், அரச தலைவராக கௌரவ ஜனாதிபதி அவர்களின் வருகையின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த திரு.ஜயசூரிய அவர்கள், கடந்த சில தசாப்தங்களாக சுதந்திர தினம் மற்றும் மார்ச் 22 ஆகிய இரு தினங்களிலும் இங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளோம். ஆனால் இந்த கிராமப்புற தலைவரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டோமா? சபையினருக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு கலாநிதக பட்டம் இருக்கவில்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார். அவர் நமக்களித்த மிக முக்கியமான செய்தி யாதெனில் "தேசிய அடையாளத்தை" தோணுதலாகும். அக்காலக் கட்டத்தில் அதனை செயல்படுத்தப்படாத காரணத்தினால் குருதி வெல்லும் பெருக்கெடுத்தது. இனவாதப் போராட்டங்கள், பயங்கரவாதச் செயல்கள், உடைமை சேதங்கள் மற்றும் நாம் உலக நாடுகளின் கடுமையாக விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டோம். இனமும் மதமும் நாம் தெரிவு செய்து பெற்றுக் கொண்டவையல்ல. அவை எமது பிறப்பு சூழலுக்கு ஏற்பட கிடைக்கப் பெற்றவை ஆகும். பௌத்தனானவன் ஒருபோதும் இனவாதியாக இருக்க முடியாது. புத்தர், மனித இனம் ஒன்றே என போதித்தார். மஜ்ஜிமா நிகாயாவின் வசேட்டா அதிகாரத்தில், விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்ற விலங்குகளின் வெவ்வேறு வேறுபாடுகளைப் பற்றி போதித்ததுடன், மனிதர்களுக்கு அத்தகைய வேறுபாடுகள் இல்லை என்றும் போதித்தார்.

டி.எஸ்.சேனநாயக்கவின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், "குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட சிலர் மீண்டும் இன மத மோதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதிநாளையே நான் இதனை தெரிவிக்கின்றேன், அது அரங்கேறிவிட்டால் அது எம் நாட்டின் முடிவாக அமையலாம். அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து பிரித்தானிய ஆதிக்கத்தின் மீது அழுத்தம் கொடுத்ததால் சுதந்திரய்தை பெற்றோம். அதிர்ஷ்டவசமாக, அக்கால தலைவர்கள் இந்த தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர். முரண்பாடுகள் இன்றி சுதந்திரத்திற்காக கைகோர்த்தார். அந்த சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் தலைவர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். எப்.ஆர் சேனாநாயக்க, டி.எஸ் சேனநாயக்க, பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன், சர் டி.பி ஜயதிலக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, டி.பி.ஜயா, ஈ.டபிள்யூ.பெரேரா, சர் ஜேம்ஸ் பீரிஸ், ஜே.ஆர்.ஜயவர்தன, டட்லி சேனாநாயக்க மற்றும் தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கு ஒன்றிணைந்து செயற்பட்ட அனைவரையும் மரியாதையுடனும் பக்தியுடனும் நினைவுகூருகிரேன்"". என தெரிவித்தார்.

நாட்டுக்காக அவர் திட்டமிடப்பட்டிருந்த நீண்டகால திட்டங்களை மேற்கொள்வதற்கு முடியவில்லை என்றாலும், நாட்டின் விவசாயத்தின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்ட விதம் இரகசியமல்ல. கல் ஓயா வேலை திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இலங்கையின் நெல் தேவையின் 22% வீதம் அம்பாறை மாவட்டத்தில் இன்னும் பயிரிடப்படுகிறது. தற்போது அங்கு 2வது அல்லது 3வது தலைமுறையினர் வாழ்கின்றனர். அவர்களுக்கு இப்போது DS பெயர் மறந்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதற்கான காரணம் யாதெனில் தற்போதைய தலைமுறைக்கு தேசிய வீராங்கனைகள் பற்றிய பூரண தெளிவு இல்லை. இது நம் நாட்டின் கல்வி முறையின் குறைபாடாக இருக்கும் அதேவேலை பெரியவர்களாகிய நாம், எமது பிள்ளைகளுக்கு நம் முன்னோர்கள் பற்றிய சரியான அறிவை பெற்றுக் கொடுக்காததும் காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலத்தை மறப்பது ஒரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். தேசிய வீரர்களை மறக்கும் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. நாம் நன்றி மறந்தவர்களாக இருக்கக்கூடாது.

கௌரவ ஜனாதிபதி அவர்களே, மதிப்புக்குரிய விருந்தினர்களை, டி.எஸ்.சேனநாயக்கா அவர்களின் உருவ சிலைக்கு முன்னால் நின்று எமது எதிர்காலத்யை பார்க்க வேண்டும். இன்று நாம் பழைய உலகில் வாழவில்லை. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் யுகத்தில் வாழ்கிறோம். கோவிட் தொற்று நோயால் உலகம் மாற்றங்களை சந்தித்தது. பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் இயற்கையும் தண்டிக்கின்றது. இலங்கையர்களாகிய நாமும் அண்மைக்காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம். பொருளாதார வீழ்ச்சியால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

IMF உடன்படிக்கையால் அந்நிய செலாவணி பிரச்சனை வெற்றிகரமாக தீர்க்கப்படு வருகின்றது. இது எம்மை நிம்மதி அடைய செய்துள்ளது. இப்போது உலகத்தின் நன்மதிப்பைப் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில் ஒரு நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது.

எமது மக்களிடம் கருத்து மாற்றம் எற்படவேண்டும். புதிய தலைமுறையினர் சிஸ்டம் சேஞ்ச் என்று இதையே கேட்கின்றனர். இது அரசாங்கமோ, பாராளுமன்றமோ தனியாகச் மேற்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அதற்காக முழு நாடும் ஒன்றுதிரள வேண்டும். அரசாங்கம் இதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு நாம் முதலில் நேர ஒழுக்கத்தை பின்பற்றும் தேசமாக மாற வேண்டும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப வேலை செய்யாமல் சம்பளம் பெறுவது பாவ செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் மக்கள்தொகை விகிதத்தைப் பொறுத்தவரை நமது நாடு உலகிலேயே மிகப்பெரிய அரச சேவையைக் கொண்டுள்ளது. மேலும், உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. சனத்தொகை விகிதத்தின் படி, உலகில் அதிக இராணுவ பலம் கொண்ட நாடாகவும் இலங்கை காணப்படுகிறது . பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளை விட அதிக எண்ணிக்கை கொண்ட இராணுவ படைகள் எங்களிடம் உள்ளது. சுமார் 300 அரசு நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை விரயமாக்குகின்றது. நாட்டில் ஊழலும் விரைய செலவுகளும் அதிகரித்துள்ளது, நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த சுமைகள் மற்றும் வலிகள் அனைத்தும் இறுதியில் நம் அப்பாவி மக்களாலை அசோகரித்துக்கு ஆளாக்குகின்றது. ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேறாது. இதையெல்லாம் புரிந்து கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்கள் கடந்த வாரம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் . இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். சட்டத்தை அமலாக்குபவர்கள் தங்கள் தொழில் கண்ணியத்தைக் காத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதை நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் போர்நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு நேர்மய பதில்கள் கிடைத்தன.

1951 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற ஜப்பானின் எதிர்காலத்தை திட்டமிடும் மாநாட்டில், டி.எஸ்.சேனநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய பங்குபற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள், "நஹி வெரேன வெரானி" என்ற சுலோகத்தை குறிப்பிட்டு, ஜப்பான் நாட்டுக்கு மன்னிப்பு வளங்க வேண்டும் என்று கூறினார். நாடு பிளவு படுவதற்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். உலக வல்லரசுகளும் அந்தச் கருத்தை ஏற்றுக்கொண்டன. தேச தந்தை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், அரசுக்கும் நம் அனைவருக்கும் இதுபோன்ற அறிவுரைகளை வழங்கியிருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் உயிருடன் இல்லாவிட்டாலும், அவர்கள் காட்டிய நல்ல வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே நாங்கள் அவற்றை தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆரம்பத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தால் நாடு இத்தகைய பாதாளத்திற்குள் செல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருந்தது.

கௌரவ ஜனாதிபதி அவர்களே, விருந்தினர்களே, நண்பர்களே, எமது மனதில் தோன்றிய இந்த எண்ணங்களில் ஏதேனும் முக்கியத்துவத்தை நீங்கள் அவதானித்தால் அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி