1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அழகியல் சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்கு செல்லும்பிரித்தானியர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அழகியல் சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்கு செல்லும் பலர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி அழகியல் சிகிச்சைகளுக்கு புகழ்பெற்றுள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், துருக்கிக்கு சிகிச்சைக்கு சென்றுவந்த பிரித்தானியர்களில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச், 11 நிலவரப்படி, 14 பேர் துருக்கி சிகிச்சைக்குப் பின் Botulism என்னும் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த Botulism என்பது, Clostridium boulinum என்பது போன்ற சில நோய்க்கிருமிகளால் உருவாகும் பிரச்சினையாகும்.

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூச்சுத்திணறலும் தசை செயலிழப்பும் ஏற்படும். சிலருக்கு மரணமும் ஏற்படலாம்.

எனவே துருக்கிக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் பிரித்தானியர்களுக்கு உள்துறை அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி