சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய
நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்களுக்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.