1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து கடற்படையினா் மணலை அகழ்ந்து கடற்படை படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு

கொண்டுவருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்..

கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதை தாம் நேரடியாக கண்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனா்.

நெடுந்தீவில் கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால் அவர்களின் கடற்படை முகாம் கட்டுமானப் பணிக்காகவே கச்சதீவில் இருந்து மணல் அகழ்ந்து எடுத்துவரப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர் | Srilankan Navy Illegal Sand Mining In Kachchadivu

மக்கள் கேள்வி
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்தே இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர்


இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கு தெரியாமலா இடம்பெறுகின்றது எனவும், அல்லது இதற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என்போருக்கும் தெரியாமலா இடம்பெறுகின்றது எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தினை கவனத்தில் எடுத்து துறைசார் அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ இவ்வாறான செய்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி