1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில்

அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இல்லாவிடில் உள்ளூர் கைத்தொழில்களை பேணுவது பெரும் பிரச்சினையாக மாறி நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க முடியாது என நேற்று இடம்பெற்ற 9 கைத்தொழில் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

தொழிற்துறை அமைச்சின் கீழ் பல்வேறு தொழில் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதற்கு முன்னர் 11 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் தலைவர்களை நியமித்திருந்தன.

ஆடைகள், மருந்துப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் பூச்சுகள், வர்ணங்கள் மற்றும் இரசாயனங்கள், படகுப் பொருட்கள், பால் மற்றும் பால் தொடர்பான பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், இறப்பர் பிளாஸ்டிக் மற்றும் கனிம பொருட்கள் தொடர்பான துறைசார் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்காக துறைசார் ஆலோசனை சபைகள் தேவையான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை தயாரிக்கும் என்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி