1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளை குறைக்கும் வகையில் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு

அனுப்பவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.

சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு
இருப்பினும், இலங்கை விலங்குகள் இறைச்சிக்காக அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காக வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு விலங்குகள் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பியுள்ளன.

சிறிலங்காவிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் விலங்குகள் அமைப்புக்கள் தமது மறுப்பினை வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இலங்கை விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஜகத் குணவர்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு மற்றும் அங்கிருக்கும் பின்னணிகளை ஆராய வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி