1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும்

ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9-ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டனர்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் சர்வஜன வாக்குரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி