1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (30) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் துறை தொடர்பாக நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, மாணிக்கக்கற்கள் தொழில் சார்ந்து ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் தற்போதைய நிலை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதில் பெறக்கூடிய மாணிக்கல் மற்றும் ஆபரணத்துறையில் நிலவிவரும் அதிகாரிகள் வாதம் முதலில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையானது, இந்த வர்த்தக ஊக்குவிப்பவராகவும், சேவை நலன் வழங்குபவராகவும் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி