1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின்
விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா்.

இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி குறையும் போது பொருட்களின் விலை என்றும் குறைந்தது இல்லை எனவும் டொலாின் பெறுமதி அதிகரிக்கும் அடுத்த நாளே பொருட்களின் விலை அதிகரிக்கின்றது எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி