1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேல் மாகாணப் பாடசாலைகளின் மாணவா்கள், பாடசாலைச் சீருடைக்கு
மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோாியுள்ளது.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியா் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தொிவித்த அவா், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளுடன் வருமாறு நாம் சம்பந்தப்பட்ட பிாிவுகளுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். ஆளுநா், பிரதான செயலாளா், கல்வித்துறை செயலாளா் ஆகியோரின் அனுமதியும் அதற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி