1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தொலைவில் இருந்து பார்க்கும்போது இலங்கையின் அனைத்து இன மக்களை போன்று வெளிநாட்டவர்களுக்கும் இயற்கை வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலை அழகாகத் தான் தெரிகிறது.

இதற்கு வெள்ளையர்கள் "பைபிள் மலை" என்று கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் பைபிள் ஒன்றை வைக்கவில்லை. சிங்களவர்கள் " " பத்தலேகல" என்று பெயரிட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு "பத்தல" (சீனிக்கிழங்கு) நடவில்லை.

இன்னும் பல்வேறு இனத்தினர் எவ்வாறான பெயர்களைச் சொல்லி அழைத்தாலும், இது வெறுமனே ஒரு மலைக்குன்று மாத்திரமே.

ஆனால் தற்போது இந்த மலையை அதாவது மலைக்குன்றை பௌத்த மலையொன்றாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு பௌத்த தாழ்வு மனப்பான்மை என்றே கூற வேண்டும். காரணம், இந்த மலை அடிவாரத்தில் அதிக அளவு முஸ்லிம் மக்களை வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மலையைப் பிடித்துக் கொண்டு பௌத்த மதவாதத்தை காண்பிக்காமல் மலையை மலையாகப் பாருங்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். அத்துடன், தேவையற்ற நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இது வனவளத் திணைக்களத்துக்கு உரித்தானது என்றும் அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆனால், தான் ஜனாதிபதிக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தசாசன அமைச்சின் செயலாளர், குறித்த மலையில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபை அனுமதி கிடைத்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறானவர்களால் தான் இந்த நாட்டின் சுற்றாடல் காட்சி ஒருமைப்பாடு (visual integrity) காணாமல் போய் உள்ளது. மலையை மழையாகப் பார்க்காமல் அதனை அவர்கள் விகாரையாகப் பார்க்கிறார்கள். அல்லது வேறு ஒரு வழிபாட்டுத் தலமாகப் பார்க்கிறார்கள்.

யுனெஸ்கோ கொள்கையின் அடிப்படையில் சூழலியல் உண்மைத் தன்மையை அதாவது உண்மைத் தோற்றத்தை (authentic nature) மாற்றி அமைக்க முடியாது என்பது இந்த அரச அதிகாரிக்கு தெரியவில்லை. அவ்வாறு மாற்றியமைப்பது தவறு என்பதும் இவருக்கு தெரியவில்லை. இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளால் 21 வது நூற்றாண்டை எப்படி கடப்பது என்பது கேள்விக்குறியே.

(சமூக வலைத்தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி