1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகளாவிய காலநிலை பற்றிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகள் மற்றும்

அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள நாடுகளில் “காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை” உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை பற்றிய உரையாடலில் காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகளுக்குத் தாக்கம் செலுத்துகின்ற தீர்மானம்மிக்க சில துறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றதுடன், நட்டங்கள் மற்றும் இழப்பீட்டு நிதியமொன்றை தாபித்தல் பற்றி கடந்த காலநிலை பற்றிய உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பல்வேறு காரணங்களால், குறித்த நிதியத்தைத் தாபிப்பதில்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலநிலை ரீதியாக இடருக்குள்ளாகின்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அதன் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் அவற்றைத் தழுவிக் கொள்வதற்கான தலையீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தீர்வு முன்மொழிவுகளின் அவசியமான பகுதியாக, குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ‘கடனுக்கான நீதியையும்’ உள்ளீர்த்துக் கொள்வது பொருத்தமென்பதே இலங்கையின் கருத்தாகும்.

அதற்கமைய, குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி