1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்து பின்னர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வாக்குகளை பெற்று

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, நீதிமன்றத்தை அவமதித்த காரணத்துக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதி ஆகியவற்றுக்கு முன்னால் நேற்றைய தினம் சட்டத்தரணிகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் அப்போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து ஒத்துழைப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி விகாரை தொடர்பான வழக்கில் தமிழ் நீதிபதி ஒருவர் தலையிடுவார் எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயற்சிப்பதாக தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கங்களால் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவுடன் சரத் வீரசேகர எம்.பிக்கு கருத்து வேறுபாடு, கடந்த ஜூலை நான்காம் திகதி ஏற்பட்டது.

குருந்தூர்மலை விவகார வழக்கு அன்றைய தினம் இடம்பெற்ற போது இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சரத் வீரசேகர எம்.பி கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை நீதவான் தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்தே, நீதவான் தொடர்பான இனவாத கருத்து ஒன்றை மேற்படி எம்பி வெளியிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி