1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய

நிதியை செலுத்தாத தோட்ட முகாமையாளர்கள், தமது கோரிக்கைகளை வென்றெடுக்கப் போராடும் தொழிலாளர்களை, தோட்ட வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் தமக்கு கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை செலுத்தாத தோட்ட கம்பனிகள், தாம் குடியிருக்கும் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தி வருவதாகவும் இதனால் பெருந்தோட்ட குடும்பங்கள் பல பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இறம்பொடை ஆர் பி பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இறம்பொடை ஆர்பி பிரிவில் ஏழு லயன் வீட்டு தொகுதிகளில் 150 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அவர்களில் 48 பேர் மாத்திரமே தோட்டத் தொழிலாளர்களாக சேவை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 39 குடும்பங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தோட்ட அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023 மே மாதம் 16ஆம் திகதி முதல் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் சேவைக்கு செல்ல மறுத்ததை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை பாதுகாக்குமாறும் ஊழியர் சேமலாப நிதி, முறையான முறையில் மாதாந்திர கொடுப்பனவுகள் மற்றும் தற்போதைய நிலுவைத் தொகையை செலுத்துமாறும் நிறைவேற்றுமாறும் தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கு குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி பணிப்புரை விடுத்ததாக இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் இறம்பொடை, ஆர்பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய தொழிலாளர் சேமலாப நிதி மற்றும் தொழிலாளர் நம்பிக்கை நிதியை வழங்கக் கோரி பத்து தடவைகளுக்கு மேல் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

மே 16ஆம் திகதி முதல் இத்தகைய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அன்று முதல் இன்று வரை தொழிலாளர்கள் பணிக்கு வராமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜூலை 5ஆம் திகதி தோட்ட நிர்வாகம் வழங்கிய கடிதத்தின்படி, அக்கடிதம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையை விட்டு வெளியேறியதாக கருதப்படும் என தொழிலாளர்களுக்கு அறிவித்தியுள்ளது. 

அத்துடன், புதிதாக பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் வழங்க வேண்டியது அவசியம் என்பதால், பணியில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் பயன்படுத்திய லயன் அறைகளை 15 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி கடிதத்தின் பிரதிகளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தின் உதவி தொழில் ஆணையாளர் ஆகியோருக்கும் தோட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த லயன் அறைகளிலேயே தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1971ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க தோட்ட வீடுகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, தோட்ட அதிகார சபையானது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்ற முடியாது.

தகவல் முரண்பாடுகள்

பெருந்தோட்டத் துறையில் உள்ள பல பெருந்தோட்டக் கம்பனிகள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்த வேண்டிய பாரிய பாக்கிகளை வைத்திருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அண்மையில் தெரியவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி