1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் நல்லிணக்கப் பணியை அடுத்த தலைமுறைக்கு மரபுரிமையாக்காமல்

அதனை தற்போது தீர்த்து வைப்பதே ஜனாதிபதி விக்ரமசிங்கவின் நோக்கம் என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய தேவை வலுவாக உள்ளதாகவும் அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் நாடு என்ற வகையில் ஒரு வருடத்திற்கு ஜெனிவா கப்பலில் ஏற வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ‘உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை’ தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி "உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின்" நோக்கங்களை விளக்கினார், மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பங்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆணைக்குழு ஸ்தாபனத்தின் நோக்கங்களை அடைவது தொடர்பில் அங்கு கூடியிருந்த சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு அனைத்துப் பிரஜைகளின் உடன்பாடும் ஆதரவும் அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி