1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேக நபர்களிடமிருந்து 200 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சாவும், 40 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி