1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வைத்தியசாலைகளில் வைத்து நோயாளிகள் திடீரென உயிரிழந்தமை தொடர்பான நிபுணத்துவ அறிக்கை மூன்று வாரங்களுக்குள்

வழங்கப்படும் என நிபுணத்துவக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

மேற்படி நிபுணத்துவ குழு இன்றைய தினம் கூடிய போது குறித்த சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களால் அறுவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தேதுன்னு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மயக்க மருந்து வழங்கியதால் பேராதனை வைத்தியசாலையின் கர்ப்பிணி உள்ளிட்ட இரு பெண்கள் உயிரிழந்தமை வயிற்று வலிக்கு சிகிச்சை பெறச் சென்ற இருபத்தொரு வயது யுவதி ஒருவர் உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களில் நாட்டுக்குள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருந்தன.

பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிய பின்னர் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் விசேட உரையொன்றை ஆற்றினார்.

கண்டி, பொத்தபிட்டிய, அழகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 11ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதன் போது அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் என்று அந்த யுவதியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக ஐந்து நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த 15 ஆம் தேதி அன்று பேராதனை வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராயத் தொடங்கினர் அத்துடன் மேற்படி யுவதியின் உயிரிழப்புக்கு காரணமான தடுப்பூசியை ஏற்றுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை வைத்தியசாலை போன்றவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கை சுகாதார அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி