1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கியதன் மூலம் நாட்டுக்கு மிக முக்கிய பங்காற்றிய அனைத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும், அதற்காக கடுமையாக உழைத்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கும் தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

'நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' அமைப்பின் தலைவர் என்ற வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நேற்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 06 ஆகிய இரண்டு தினங்களிலும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (19) இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி