1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிலைய விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சினோபெக் நிறுவனம் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயல்பட்டை ஆரம்பிக்கவுள்ளது.

சினோபெக் நிறுவனம் நேரடியாக அந்நிய செலாவணியை செலவழித்து எரிபொருள் தொகைகளை இலங்கைக்கு கொண்டுவருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும், 12 மாத நிதி வசதிகளுடன் எரிபொருள் தொகைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சினோபெக் நிறுவனத்தினால் 45,000 மெட்ரிக் தொன் எரிபொருள், முதல் தொகையாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி