1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் சடலம் குறித்த

பிரேத பரிசோதனை நேற்று (02) நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறவிருந்து.

இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ​​இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு வந்துள்ளனர்.

இதன்போது அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை பணிகள் இன்று (03) வரை ஒத்திவைக்கப்பட்டது.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

கடந்த 27ம் திகதி குவைத்தில் அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியானது.

வைத்தியசாலைக்கு வந்த மூன்று பெண்களில் ஒருவர் ஓமனில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.

அவருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆவதாக சாட்சி அளித்ததாகவும் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதாக யூடியூப் மூலம் அறிந்ததாக எனது மகன் கூறினான்.எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதையறிந்து இலங்கை வந்தேன். அவரது சடலம் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனது கணவர் மேலும் இருவரை திருமணம் செய்துள்ளதாக பின்னர் அறிந்தேன். நான் சடலத்தை ஏற்க விரும்பவில்லை, ஆனால் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளிக்கவும் என்றார்.

எனினும், இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் மூவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு திருமண சான்றிதழ்கள் மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்தகட்ட பணிகள் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி