1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அணி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்

பிரேரணை மீதான விவாதம் நாளை(10.08.2023) இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிரேரணையை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு இணங்கவில்லை என தெரிவித்துள்ளது.

முன்னர் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் பல இருப்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களை தமக்காக ஒதுக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்: அறிவிப்பை வெளியிட்ட சஜித் அணி | No Confidence Motion Against Health Minister

கிரிக்கெட் தொடர்பான விவாதம்

இதனால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மேலும் பிற்போடப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விவாதமும் கிரிக்கெட் தொடர்பான விவாதமும் நடத்தப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு அறிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி