1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக கூறும் அந்த அறிக்கை இந்த நெருக்கடி

மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளது. நாட்டில் 62 வீதமான மக்கள் தமது உணவு பாதுகாப்பிற்காக தமது சேமிப்பிலிருந்து பணம் எடுப்பது, கடன் வாங்குவது அல்லது கடனிற்கு உணவு கொள்வனவு செய்வது ஆகிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இலங்கையில் தாமதமடைந்துள்ளதால் மழை பொழிவு குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் விவசாய உற்பத்தி பாதிப்படைந்து உணவு பாதுகாப்பின்மை நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வறட்சியின் காரணமாக நெற் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து உற்பத்தி குறையும் எனவும், இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும், அப்படி ஏற்பட்டால் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி