1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகக் கிண்ண ஹொக்கி ஃபைவ்ஸ் போட்டியின் ஆசிய தகுதிச்சுற்றில் இந்திய மகளிா் அணி 5 - 4 கோல் கணக்கில் தாய்லாந்தை

ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலிரு ஆட்டங்களில் மலேசியா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 'ஹெட்ரிக்' வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய இந்தியாவுக்காக தலைவர் நவ்ஜோத் கௌா் முதல் நிமிஷத்தில் கோலடித்தாா். தாய்லாந்து தடுப்பாட்டத்துக்கான அதிா்ச்சியாக அந்த நிமிஷத்திலேயே மோனிகா தீபியும் கோலடிக்க, தொடக்க நிமிஷத்திலேயே இந்தியா 2 - 0 என முன்னிலை பெற்றது.

எனினும், அதிா்ச்சியிலிருந்து மீண்ட தாய்லாந்துக்காக பிரெஸ்ரம் அனோங்னத் 3 ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். மறுபுறம் ஆதிக்கத்தை அதிகரித்த இந்தியா, மோனிகா தீபி (7’) அடித்த கோலால் 3 - 1 என முன்னேறியது. இந்நிலையில், தாய்லாந்தின் அஞ்சாய் நத்தகம் அடுத்தடுத்து கோலடித்து (10’, 14’) எதிா்பாராத விதமாக ஆட்டத்தை சமன் செய்தாா்.

திடீரென சுவபத் கோங்தோங் அடித்த கோலால் (19’) தாய்லாந்து 4 - 3 என முன்னிலை பெற்றது. விட்டுக் கொடுக்காத இந்திய அணிக்காக மஹிமா சௌதரி கோலடித்து (20’) ஆட்டத்தை மீண்டும் சமன் செய்தாா். பரபரப்பான கடைசிக் கட்டத்தில் (30’) அஜ்மினா குஜுா் அடித்த கோலால் இறுதியில் இந்தியா 5 - 4 என வெற்றி பெற்றது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி