1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புலம்பெயர்வு வள மத்திய நிலையம் (Migration Resource center) ஒன்றை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது.
இதுதொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அமைச்சருக்கும் ,நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர் உயர்ஸ்தானிகர் Andrew Traveller க்கும் இடையில் இன்று காலை இடம்பெற்றது.
இந்த நிலையத்தை அமைப்பது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால், சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
இந்த நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மூன்று வருட காலத்திற்கு நிதி உதவி வழங்கவும் நியூசிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் இதன் ஊடாக செயல்படுத்தப்படுவதுடன் மனித கடத்தல் மற்றும் முறையற்ற புலம்பெயர்வுகளைத் தடுப்பதில் இந்த நிலையத்தின் ஊடாக முக்கிய பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும். இந்த வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் படிப்படியாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி