1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொரளை பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனையின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர்

மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

மல்வத்தை அமில என்ற போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இன்று (30) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் தெமட்டகொடை மிஹிந்துசென்புர அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 150 கிராம் ஹெரோயினுடன் ஒருவரை கைது செய்தனர்.

பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மல்வத்தை அமில என்ற போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்படி அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபரை பயன்படுத்தி பொரளை பி.சரவன்முத்து மைதானத்திற்கு அருகில் மல்வத்தை அமிலவை அழைக்க திட்டமிட்டனர்.

அவர் சிவப்பு நிற காரில் குறித்த இடத்திற்கு வந்தமை அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அப்போது, ​​வெள்ளை வேனில் வந்த விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ய சென்று கொண்டிருந்த போது, ​​அவர் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார்.

பின்னர் வேனில் இருந்து இறங்கிய பொலிஸார் அவரை விரட்டிச் சென்றனர்.

அப்போது, சந்தேக நபர் தனது காரை பொலிஸ் அதிகாரிகளை நோக்கி மோதும் வகையில் செலுத்தியுள்ளார்.

அங்கு செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த காரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை துரத்திச் சென்ற போதிலும், தெமட்டகொடை பேஸ்லைன் வீதி ஊடாக பேலியகொடை நோக்கி அதிவேகமாக பயணித்த காரை பொலிஸ் அதிகாரிகள் தவறவிட்டனர்.

பின்னர் கிடைத்த தகவலின்படி, பேலியகொடை பகுதியில் உள்ள கொள்கலன் முனையனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

வாகனத்தைச் சோதனையிட முற்பட்ட போது அதன் மீது ​​மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்தது.

இதேவேளை, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவை பேலியகொடை லஹிரு என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதன்படி, போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி