1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாரிய சதியின் பெறுபேறு விளைவு விளைவாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தொடர்பாக பல தகவல்கள் உலகின் மத்தியில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
வெளிவரும் அனைத்தும் உயிர்த்த தாக்குதல் இடம்பெற்ற நாள் முதல் நாம் தெரிவித்த அனைத்து கூற்றுக்களையும் இது மீண்டும் மீண்டும் உறுதி செய்துள்ளன. நிச்சயப்படுத்தும் ஆதாரமாக இவை அமைந்துள்ளன.
இதனால் , முன்னெப்போதையும் விட விரிவான, பாரபட்சமற்ற விசாரணையின் தேவை தற்போது மிகவும் வலுவாக வெளிப்பட்டுள்ளது.
அன்று பாராளுமன்றத்திலும் வெளியிலும் நாம் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அதன் மூளையாக செயல்பட்டவர்களையும் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குரல் எழுப்பினோம்.
இவ்வாறு குரல் எழுப்பிய போது அதற்கு எதிராக அன்று முதல் பல்வேறு தரப்பினரிடமிருந்து எமக்கு எதிராக பல அச்சுறுத்தல்களைப் போன்று அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
அதுமாத்திரமின்றி அப்போது நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சில எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் மௌனம் சாதித்தமை இந்த விடயத்தில் எம்மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், அன்று இந்தத் தாக்குதலின் உண்மையை வெளிக்கொணர எதிர்க்கட்சியில் இருந்தவாறு நளின் பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரஹ்மான், இரான் விக்கிரமரத்ன போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் இணைந்து போராடியதை சுட்டிக்காட் விரும்புகின்றோம்.
இதேபோன்று நாங்கள் மிகவும் நம்பிய சில மதத் தலைவர்களிடமிருந்தும் கூட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எங்கள் மீது சுமத்தப்பட்டன.
இபோராட்டம் தொடர்ந்தது. அதிலிருந்து தொடங்கிய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தால் இறுதியில் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டது
'தேவனுடைய ஆலயத்தை இடிப்பவன் தேவனால் அழிக்கப்படுவான். ஏனென்றால் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீயே அந்த ஆலயம்.' என்று துறவி பவுல் அடிகள் கூறியுள்ளார்.நெருக்கடியை உருவாக்கி அதிலிருந்து அதிகாரம் பெற்ற எவராலும் அந்த சக்தியை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கையே நிரூபித்துள்ளது.
வங்குரோத்து நிலை காரணமாக ஒவ்வொரு துறையும் வீழ்ச்சியடைந்த நாட்டின் சவால்களை சில தலைவர்கள் ஏற்க அஞ்சினார்கள் அப்போது திரு.ரணில் விக்கிரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார், குறுகிய காலத்துக்குள் சவாலை முறியடித்து வெற்றிக்கொண்டமை மகிழ்ச்சிக்குறியவிடயமாகும்.
அன்று ஏழு தனித்துவமான நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒன்றிணைந்தோம்.
இதன் போது முன்வைக்கப்பட்ட ஆறு நிபந்தனைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன மேலும் எஞ்சியிருப்பது 'ஈஸ்டர் தாக்குதல்' தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.
அதற்காக சர்வதேச விசாரணையை கோரியிருந்தோம் மீண்டும் அந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்காக நாம் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்த போதிலும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே ஜனாதிபதியிடம் கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைத்தோம். தற்போது மீண்டும் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதால், இது தொடர்பாக வலுவாக கோரிக்கையை முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும் அரசாங்கத்தில் இருக்கும் போதே நாங்கள் கோரிக்கையை முன்வைக்கும் போதும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக குரல் எழுப்புவதில்லை என்பது வேதனைக்குரியது.
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். உண்மைக்குபுறம்பான சாக்குப்போக்கில் உண்மையை மறைக்க முடியாது. சட்டத்தின் எதிர்காலத்திலும் இயற்கையின் எதிர்காலத்திலும் அவர்கள் நிச்சயமாக உண்மையை அம்பலப்படுத்தும் நிலை ஏற்படும்.
ஹரின் பிரனாந்து,
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
மனுஷ நாணயக்கார
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி