1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக்க

நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8,000 தொழிலாளர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.

இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முடிக்குமாறு விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகளை எந்தவித செல்வாக்குக்கும் ஆட்படாமல் மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி