1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் (UNHCR), ஆசாத் மௌலானா என்ற மொஹமட் ஹன்சீர் மொஹமட்

மிஹ்லருக்கு, 2022 ஜனவரியில் 'தங்குமிடம் கிளஸ்டர் ஒருங்கிணைப்பாளர்' பதவியை வழங்கியுள்ளதாக 'Sri Lanka Guardian' வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வில் தனது அறிக்கையை முன்வைத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 ஆவணப்படத்தில் ஆசாத் மௌலானா ஒரு "விசில்ப்ளோவராக" தோன்றினார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு காரணமான தற்கொலை குண்டுதாரர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் மருத்துவ தொழில்சார் நபரான மொஹமட் சப்ராஸ் மொஹமட் சுபியான் என்பவர் தொடர்பான வெளிப்படுத்தல்களும் அந்த செய்தி அறிக்கையில் கீழ்க்கண்டவாறு காணப்பட்டது.

" தற்கொலை குண்டு தாக்குதல் நடைபெற்ற சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து வெடி பொருட்களை கையாளும் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஹரான் ஹஸிமின் சகோதரரான ரில்வான் ஹஸிமுக்கு மருத்துவம் செய்யும் பொறுப்பு டாக்டர் சப்ராசிடமே கையளிக்கப்பட்டிருந்தது. பலத்த காயங்களுக்கு உள்ளான ரில்வானுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்நபர் தொடர்பான உண்மைத் தன்மை மறைக்கப்பட்டே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது."

"சஹரான் ஹசிமின் சகோதரரான ரில்வான் ஹசிமுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதில் அசாத் மௌலானா மற்றும் சப்ராஸ் ஆகிய இருவரும் பெருமளவு பங்கு வகித்துள்ளனர். எவ்வாறாயினும், ஏப்ரல் 26ஆம் திகதி அன்று ரில்வான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் ஆகியோர் சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டனர்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், "2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முழு சூழ்நிலைகள் குறித்து மேலும் விசாரணையைத் தொடர சர்வதேச ஆதரவுடன் ஒரு சுயாதீன விசாரணை" பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்புடைய குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை தார்மீக சுதந்திரம் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில தரப்பினர் உண்மையை மறைத்து சதி கோட்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீ லங்கா கார்டியன் அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இத்தகைய பாரதூரமான சம்பவங்கள், UNHCR மற்றும் பரந்த ஐ.நா அமைப்பின் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறைகளை கேள்விக்குள்ளாக்குவதாக ஸ்ரீ லங்கா கார்டியன் மேலும் கூறுகிறது.

இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக UNHCRஇன் பிராந்திய அலுவலகம் மற்றும் தலைமையகத்தை ஸ்ரீ லங்கா கார்டியன் தொடர்பு கொண்ட
போதிலும் அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி