1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இதற்கமைய, கடற்படை புலனாய்வு அதிகாரி மற்றும் அவரது சாட்சியாக பொலிஸில் முறைப்பாடு செய்த மற்றைய அதிகாரியும் கைது

செயது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் டி.பிரதீபன் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாடு செய்த கடற்படை புலனாய்வு அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

குறித்த அதிகாரியை 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜா அன்றைய தினம் அழைப்பாணை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் பெப்ரவரி 29, 2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக கடற்படை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு "வெறும் பழிவாங்கும் செயலாகும்" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், நாட்டின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் அரச அனுசரணையுடன் கூடிய குற்றங்கள் உட்பட தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி