1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின்

தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்தும் இணையத் தளமொன்றை ஆரம்பிப்பதாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதி, அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாத வாக்குறுதியாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். நிதியிலிருந்து 3 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு, அரசாங்கம் நூறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 57 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் 38 வாக்குறுதிகள்
மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன.

"நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்ன? மார்ச் 31ஆம் திகதிக்குள் அரசின் வரி வருவாய் 650 பில்லியனாகவும், ஜூன் 30ஆம் திகதிக்குள் 1,300 பில்லியனாகவும் உயர்த்தப்பட வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளையும் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் பிரதான அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை அமைச்சரவை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதையும் நிறைவேற்ற முடியவில்லை. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் ஆண்டறிக்கையை வெளியிடாத 52 அரசு நிறுவனங்கள் ஜூன் 30ஆம் திகதிக்கு முன் 2022 ஆண்டு அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஜூன் 30 அல்ல இன்று வரை அதை நிறைவேற்ற முடியவில்லை. மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வருவாய் ஈட்டுவதற்கான வழியை அரசு தயார் செய்து, ஜூலை 31ஆம் திதிக்குள் அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. அதுவும் செய்யப்படவில்லை. அத்தகைய 19 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. அல்லது அவை நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

"57 நிபந்தனைகளில் 38 நிபந்தனைகளை மட்டுமே அரசாங்கம் நிறைவேற்றியதால் இரண்டாம் தவணை கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதாக சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது இரண்டாவது தவணை என்பதால் ஒரு சிறு திட்டு வரும் என்று நினைக்கிறேன். மூன்றாம் தவணைக்குள் இவை நிறைவேற்றப்படா விட்டால், அவை நிறைவேறும் வரை தவணை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாங்கள் நாடுவது இது 17ஆவது முறையாகும். கடந்த 16 தடவைகளும், நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால் துணைப் பணம் கிடைக்காமல் கைவிடப்பட்டது.

நிபந்தனை 40!

காலதாமதமாக நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலும், அரசு ஒருபோதும் நிறைவேற்றாது என்ற நிலை ஒரு நிபந்தனைக்கு உள்ளது. அது 40ஆவது நிபந்தனையாகும். அதாவது அரசாங்கத்தின் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தும் இணையதளம் ஒன்றைத் தொடங்க வேண்டும். முக்கியமாக மூன்று விடயங்களை அந்த இணையதளத்தில் விளம்பரப்படுத்த வேண்டும்.

1) அரச கொள்முதல் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள்.

2) அந்தந்த முதலீட்டாளருக்கு முதலீட்டு சபையால் வழங்கப்படும் வரிச் சலுகைகள்.

3) வாகனங்கள் இறக்குமதியில் வரி விலக்கு பெறும் நபர்களின் பெயர்கள்.

"இது குறித்த சில தகவல்கள் பல்வேறு நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்களை வெளியிடும் பொது இணையதளம் உருவாக்கப்படவில்லை. இந்தப் பணி சரியாக நடந்தால், இலங்கையில் இடம்பெறும் பாரிய ஊழல்களை 50 சதவீதம் குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

"உண்மையில், சர்வதேச நாணய நிதியத்தில் பதுங்கி ஒரு முக்கியமான வெளிப்பாட்டை அரசாங்கம் மூடி மறைத்துள்ளது. அதுதான் மூலோபாய நிறுவனச் சட்டத்தின் கீழ் அமைச்சரவை வழங்கிய வரிச் சலுகையாகும். அங்குதான் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் மறைந்திருக்கின்றன. ஆனால் ஐஎம்எப் ஒப்பந்தத்தில் அவை வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. அரசாங்கம் IMF கடன் பெறாவிட்டாலும், அது பெயரிடப்படாது என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி