1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊழியர்சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களில் உள்ள பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி

ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் முன்மொழிந்திருந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

"E.P.Fமற்றும் E.T.F இரண்டும் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டு சுயாதீன குழுவின் கீழ் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு E.P.Fமற்றும் E.T.F இரண்டும் வேண்டும். ஏனைய சுயாதீன நிதிகளும் இதில் சேர்க்கப்பட வேண்டுமா என்பதுதான் பிரச்சனை. அவற்றின் நிதியை நாம் அங்கீகரிக்க வேண்டுமா என்பதுதான் மற்றைய பிரச்சினை. 

“தற்போது அரசாங்கத்திற்கு மட்டுமே கொடுக்கின்றோம். அதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.அதைச் செய்யவேண்டும் என நினைக்கின்றேன்.இது இந்நாட்டு மக்களின் சேமிப்பு.எனவே அந்த நிதியை வெளி நாடுகளில்  முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கலாம்" என்றார்

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி