1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், பணிப்பாளர்களும் கண்டிப்பாக சுற்றிவளைப்புக்களை நடத்துவோம். அப்படியும், அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது போனால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவித்துள்ளேன்."

இதேவேளை, பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அரிசியின் விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அரிசி வியாபாரி டட்லி சிறிசேன, அரிசியை மறைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி