1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திற்கு 46 வீதமான மக்கள் விருப்பம் உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட

கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் விளம்பரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பின்படி தற்போதைய அரசாங்கத்திற்கு 17 வீதமான மக்களின் அங்கீகாரமும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அங்கீகாரத்தில் 29 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமான அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார பின்வருமாறு கருத்தை வெளியிட்டார்.

"ஜே.வி.பி. இன்று ஜனாதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசுகிறதா? இல்லை. நான் சிவப்பு யானை என்று அழைத்தது நினைவிருக்கிறது. இந்த நாட்டை திவாலாக்குவதற்கு மிகவும் கடினமாக உழைத்தவர்கள் அந்த தோழர்களே. ஜே.வி.பிக்கு இன்று அதிக பணம் உள்ளது. இப்போது. கூட்டத்திற்கு சுமார் 100 இலட்சம் ரூபா பணம் செலவிட்டுள்ளனர். குருநாகல் கூட்டத்திற்கு நுவரெலியா மக்களும் வருகின்றனர்.'' என குறிப்பிட்டார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி