1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக நீக்க வேண்டும் என 'நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' வலியுறுத்துகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (08)  விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு நாம் வலியுறுத்துகின்றோம். அதற்கு கால அவகாசம் போதவில்லை என்றால், மேற்படி செயற்பாடுகளை தொடர்வதன் மூலம், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலே இந்நாட்டின் கடைசி ஜனாதிபதித் தேர்தலாகும் என்ற உறுதிமொழியை நாட்டுக்கு வழங்க வேண்டும்.

“இந்த நாட்டின் எதிர்கால நல்வாழ்வு பற்றிய எதிர்பார்ப்புகளை தூண்டும் வகையில், இந்த நாட்டில் நிறுவப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனநாயக முறையை இல்லாதொழிக்க இனியும் தாமதிக்கக்கூடாது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி