1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு

கப்பல் போக்குவரத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி - காங்கேசன்துறை, தூத்துக்குடி - கொழும்பு, ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே பயணி கள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக, மும்பையில் நடந்த சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் துபாயில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, தூத்துக்குடி – காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரியில் தொடங்கப்பட உள்ளதுடன், இதற்கான கப்பல் விரைவில் தூத்துக்குடிக்கு வரவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தக் கப்பலானது தினசரி 120 கடல் மைல் தொலைவை 3 முதல் 4 மணி நேரத்தில் கடக்கும் எனவும் 400 பயணிகள், 40 கார்கள், 28 பஸ்கள் மற்றும் டிரக்குகளை கொண்டு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண கட்டணமாக 6000 இந்திய ரூபாவும், பயணிகளிடம் 12,000 இந்திய ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது.

சுற்றுலாவிற்கு சொந்தமான கார்கள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள், தங்கள் கார்கள் மற்றும் பஸ்களையும் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கப்பலில் வரி இல்லாத விற்பனைக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்த கப்பலில் பயணிக்க விமானப் பயணத்திற்கு தேவைப்படுவதைப் போன்று விசா, கடவுச் சீட்டு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

பயணிகள் 80 கிலோகிராம் எடையை மட்டும் தங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் குறிப்பு

  1. தூத்துக்குடியில் இருந்து நேரடியாக காங்கேசன்துறைக்குக் கப்பல் சேவை நடைபெறுவதாயின் அக்கப்பல் மன்னார் - இராமேஸ்வரம் இடையிலான இராமர் பாலப் பகுதியை ஊடறுத்தே செல்லவேண்டும். சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் நடவடிக்கை பூர்த்தியாகாத நிலையில் இப்பாதை ஊடான போக்குவரத்து சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. எனினும் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு சென்று, பின்னர் அங்கிருந்து இலங்கையைச் சுற்றிக் கொண்டு காங்கேசன்துறைக்கு கப்பல் சென்று அதே பாதையில் திரும்ப முடியும். ஆனால் அதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.
  2. இந்திய, இலங்கை வாகனங்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றைய நாட்டுக்குள் பயணிப்பது தொடர்பான இணக்க ஏற்பாடுகள் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், அதுவும் சாத் தியமா என்ற கேள்வியும் எழுகின்றது. (காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி