1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“இஸ்ரேலின் தாக்குதலால் காஸா நகரம் குழந்தைகளின் கல்லறையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்

செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. காஸாவில் மருத்துவமனைகள், அகதிகள் முகாம், மசூதிகள், தேவாலயங்கள், கடைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதனால், பாதுகாப்பற்ற சூழலே அங்கு நிலவுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அதேவேளை, காஸாவிலுள்ள ஹமாஸ் படையினர் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில் மக்களை பயன்படுத்திகொள்வது முறையல்ல. இது மனிதத்தன்மையற்றது. பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். தரைவழித் தாக்குதல் தொடங்கிய ஒக்டோபர் 27 முதல் இஸ்ரேல் ராணுவத்திலிருந்து 31 பேர் பலியாகியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையிலான போரில் இஸ்ரேலில் 1400 பேர் பலியாகியுள்ளனர். 240 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டுள்ளனர். காஸாவில் 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 33ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.

அதேநேரம், நேற்றிரவு காசா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவின் முக்கிய மருத்துவமனைகளான அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியன் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்கின என்று ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸ், நுசிராத் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாம்களும் இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பவில்லை என தனது அறிக்கையில் ஹமாஸின் உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தெரிவிக்கையில், குடியிருப்புகளும் தாக்குதலில் சிக்கியதால் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், ரமல்லாவில் உள்ள பிர்செயிட் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிவளைத்த இஸ்ரேல் இராணுவத்தினர், பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தியது.

அத்துடன், 45இற்கும் அதிகமான பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர் என்று ஹமாஸ் தலைமையிலான உள்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மொஹ்சென் அபுஜினா கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மொஹ்சென், ஹமாஸின் உளவுத்துறை மற்றும் ஆயுதப் பிரிவின் தலைவராக செயல்பட்டார். இஸ்ரேல் போருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தயாரித்த குழுவிலும் இருந்துள்ளார். அவரை நேற்று காலை கொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு இராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், தரைவழியாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் இராணுவ படைகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்துள்ளது.

அங்கு, ஹமாஸ்களை சுற்றி வளைத்து இராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் குழு ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொடங்கியுள்ளோம். சுமார் நூறு கிலோமீற்றர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் இராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,டோக்கியோவில் நடந்துவரும் ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நாடுகள், இஸ்ரேல் - காசா போரில் இஸ்ரேலை ஆதரித்துள்ளனர். 'ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக' கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் 'தற்காலிக போர் நிறுத்தம்' தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர்.

தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி