1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இறுதி வரவு செலவுத் திட்டம் எனவும், இந்த

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் காற்றில் பறக்கவிடப்பட வாய்ப்புள்ளதாகவும் சமகி ஜனபலவேகயவின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எம்.பி கூறியதாவது,

"நாடாளுமன்றத்தை கலைக்கவும்"

“தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், வரிப் பணத்தைக் கூட்டி, இந்நாட்டு மக்கள் வாழ முடியாதபடி, மக்களின் ஆணை இல்லாத மிகச் சிறிய கூட்டம் இந்த நாட்டு மக்களைக் கொடூரமாகப் பிழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலின்படி நாட்டை நடத்துகிறார்கள். இந்த பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று தான் கூறுகின்றோம். இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தலுக்குச் சென்றால் மக்களின் கருத்தை அறியலாம்.

“இம்மக்கள் மீது எந்த உணர்வும் இல்லாத, நரம்புத் தளர்ச்சி இல்லாமல் நாடாளுமன்ற வாக்கெடுப்பைக் கூட நடத்த முடியாத ஒரு குழு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்துகொண்டு முடிவுகளை எடுக்கிறது.

“எல்லாம் பாதியில் முடிந்துவிட்டது.. கடன் மறுசீரமைப்பு பாதியில்.. வெளிநாட்டு உறவுகள் பாதியில் ஆரம்பித்து தொடர முடியாது.. இந்த வரவு செலவுத் திட்டம் ரணிலின் கடைசி வரவு செலவுத் திட்டம்.. மக்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வருமான வழிகள் கொண்டுவரப்பட வேண்டும்.. அவர் ஜனாதிபதியாகி 1 1/2 வருடங்களாகின்றன. ஒவ்வொரு வார வார இறுதியிலும் வெளிநாடு சென்று வருகிறார்.

“ரணில், சமகி ஜன பலவேகயவுக்கு மிகவும் பயப்படுகிறார்.. இப்போதே அரசியல் விளையாடுவதற்கான களத்தை உருவாக்குகிறார்கள்.. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமகி ஜன பலவேகய இணைந்தால் வெற்றியடைய வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் பல்வேறு கணக்கெடுப்புகள் மூலம் காட்ட முயற்சிக்கின்றனர். திருடர்களுடன் சென்றால் அழிந்து போவோம்” என்று, எஸ்.எம்.மரிக்கார் எம்.பி தெரிவித்தார். என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மரிக்கார் எம்.பி, விளையாட்டுச் சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“விளையாட்டுச் சட்டத்தை மாற்றியமைக்காமல், இலங்கை கிரிக்கெட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. சூதாட்டக்காரர்களும் ஊழல்வாதிகளும் இதில் நுழைவதை நிறுத்த வேண்டும். கிளப் மாபியாவை இல்லாது செய்ய வேண்டும்.

“அப்போதுதான், சிறப்பான நிர்வாகக் குழுவை ஸ்தாபித்து, கிரிக்கெட்டை முன்னேற்ற முடியுமாக இருக்கும். இதற்குள் அரசியலும் மூக்கை நுழைக்கிறது.

கிராமத்தில் உள்ளவர்களும் கிரிக்கெட் அணிக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி