1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம்

வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த பிரேரணையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உறுதிப்படுத்தினார்.

தீர்மானத்தின் மீதான விவாதம் நாள் முழுவதும் நடைபெற்றதோடு, விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேசினர்.

குறித்த பிரேரணை மாலையில் பரிசீலிக்கப்பட்ட போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாதமை விசேட அம்சமாகும்.

தீர்மானம் பரிசீலிக்கப்பட்டபோது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பினர். சபையில் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முதலில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானம் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்கெடுப்பு கோரி முழக்கமிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.

கிரிக்கெட் விளையாட்டிற்காக ஜாதி, மதம், வர்க்கம், கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும், கிரிக்கெட் விளையாட்டை அழிக்கும் துரோகிகளையும், ஊழல்வாதிகளையும், சகலரது உடன்பாட்டிலும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணையை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, குழுத் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, முறையான வரைவு தயாரித்து, புதிய விளையாட்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்திருப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பு மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் தற்போதைய கட்டமைப்பை ஆராய்ந்த பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை முழுமையாக மாற்றி தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழுவை நிறுவுவது நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முதன்மையான பரிந்துரையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டுக்கள் தொடர்பான கொள்கை தயாரிப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழு

எட்டு அடிப்படை நோக்கங்களை அடைவதற்காக தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் பதவிக்காலம் 4 வருடங்களாக இருக்க வேண்டுமென்பதோடு, அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நியமனங்களை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி