1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், போட்டிகளின்

தொடர் தோல்வி குறித்தும் எதிர்வரும் போட்டிகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘உண்மையிலேயே நடந்த போட்டிகளை சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவலையடைகிறோம். அது தவிர்ந்த எனக்கு கூறுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

நாம் அழுத்தத்திற்கு உள்ளாகினோமா என்று கேட்டால், அவ்வாறு இல்லை. ஆரம்பமே நன்றாகத்தான் இருந்தது. முதல் இரண்டு ஆட்டங்களையும் சிறப்பாக விளையாடினோம்.

பின்னர் தொடர் தோல்விகளிலும் நாம் அணியாக என்ன செய்வது என்றே சிந்தித்தோம். எங்களால் இயன்றளவு சிறப்பாக விளையாடினோம்.

அணிக்குள் பிளவுகள் இல்லை. உண்மையில் சிறப்பாகவே விளையாடினோம். வெற்றிக்காகவே அனைவரும் முயற்சித்தோம். எனக்கு அணி வீரர்களில் ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்து. விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாம் சோர்ந்தால் ஆட்டமும் தோல்வியில், நாம் எமது மூன்று பாகங்களிலும் (துடுப்பாட்டம். பந்து வீச்சு, களத்தடுப்பு) நன்றாக செயற்பட வேண்டும்.

எதிர்வரும் போட்டிகள் தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்டத்தில் நன்றாக விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். - 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வௌியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாகவும், அவர்களின் சதித்திட்டம் காரணமாக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று தெரிவித்தார். 

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 02 நாட்களில் பொது ஊடகங்கள் முன் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

image_0679bbbc41.jpeg2-4.jpeg

1-3.jpeg

sl_team_231110.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி