1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற

குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குறித்த பிரதிவாதிகளுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

யோகராஜா நிரோஜன், கரன் எனப்படும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 16 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி வாகனத் தொடரணி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமதுவை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டடே குறித்த மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3pri_2.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி