1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“இந்த ஊழல்வாதிகளை நீக்குவதற்காக, நான் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்குச் சென்று நீதியை

பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றேன். அவ்வாறில்லையென்றால் உயர் நீதிமன்றத்தை நாடுவேன். கிரிக்கெட் தொடர்பாக எனக்கு சட்ட மா அதிபர் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே, என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயத்தை கையாள்வேன்” என்று, விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்

கிரிக்கெட்டுக்கு புதிய யாப்பே மாற்றத்துக்கான தீர்வாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (10) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிரிக்கெட் தொடர்பாக புதிய யாப்பை உருவாக்குவதற்காக கே.டி சித்ரஸ்ரீ தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அதன்படி, கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க வேண்டுமாயின் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்தக் குழு கிரிக்கெட் யாப்பொன்றை உருவாக்கியுள்ளது.

“இந்த குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதனையும் நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட்டுக்கு இந்த புதிய யாப்பே மாற்றத்துக்கான தீர்வாக அமையும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

“இதற்கிடையில் கிரிக்கெட் சபையிலுள்ள சிலர் ஊழல் மோசடியில் ஈடுட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் குற்றவாளிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் புதிய யாப்பை கொண்டு புதிய நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டியுள்ளது.

“இந்த காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல திருடர்களுக்கே வாய்ப்பளிப்பதா அல்லது கிரிக்கெட்டுக்கும் நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்திய தலைவர் ஒருவரைக் கொண்டு கிரிக்கெட்டை சரிசெய்து முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

“கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இலங்கை கிரிக்கெட்டை தடை செய்தால், அர்ஜூன ரணதுங்க தலைமையிலான குழுவைக் கொண்டு, கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை நிறைவேற்றி, புதிய தேர்தல் ஒன்றுக்குச் சென்று, அடுத்து வரும் தொடர்களுக்கு தயாராக வேண்டும்.

“அதற்காக இந்த நாடாளுமன்றம் எனக்கு முழுமையான ஒத்துழைப்பையும் அனுமதியையும் வழங்க வேண்டும்.

இந்த ஊழல்வாதிகளை நீக்குவதற்காக, நான் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்குச் சென்று நீதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

“அவ்வாறில்லையென்றால் உயர் நீதிமன்றத்தை நாடுவேன். கிரிக்கெட் தொடர்பாக எனக்கு சட்டமா அதிபர் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே, என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயத்தை கையாள்வேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி