1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் பாராளுமன்றம், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும், கிராமங்கள், நகர

மட்டங்களில், மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு வேலைத்திட்டத்திற்காக ஒன்றிணைந்தன என்றும், இந்நிலையில் நேற்று (10) இரவு சர்வதேச கிரிக்கெட் பேரவை நமது நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்துள்ளதை அறியக்கிடைத்தோம் என்றும், இது தொடர்பாக இன்று (11) காலை இ.எஸ்.பி.என். அலைவரிசைக்கு சொந்தமான Crick Info இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிள்ளதன் பிரகாரம், 

எமது சொந்த நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கட் பேரவை என்ற அமைப்பே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது சொந்த நாட்டில் ஒரு நிறுவனம் நாட்டிற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டாலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்றும், அவர்கள் சகல பிரஜைகளுக்குமே துரோகமிழைத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.பி.எல் தடைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான பங்கேற்பும் இழக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகவும், தங்கள் மோசடி பரிவர்த்தனைகள், ஊழல் பண பரிவர்த்தனைகள் மற்றும் செயல்முறைகளை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர் என்றும், ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பல்வேறு தடைகள் வருவதாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அவர்கள் அவ்வாறு கூறினால் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட கிரிக்கட் நிர்வாகத்தின் மீது இலஞ்சம், ஊழல், கப்பம், கொமிசன் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது பிரச்சினைக்குரியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கிடைத்த பணம் கூட திருடப்பட்டுள்ளது.

2018 இங்கிலாந்து இலங்கை சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 5.5 அமெ.டொ.மி தொகைக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்றும், இந்த வைப்புத்தொகை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள கணக்குகளில் 10,175 இலட்சம் பணம் இருப்பதாக கூறப்பட்டாலும், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இந்தப் பணம் உண்மையில் நாட்டின் கிரிக்கெட் அபிவிருத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கிரிக்கெட்டை அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்ட லோடா அறிக்கைக்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை என்றாலும், இலங்கையில் கிரிக்கெட் ஊழல் மிக்கது என்பதை உள்ளடக்கிய குசலா சரோஜனி அறிக்கை, சித்ரசிறி அறிக்கை என்பன சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளன என்றும், இலங்கையில் இவ்வாறான செய்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்படி தடை உத்தரவு வரும் போது கிரிக்கெட் விளையாட்டை எப்படி வலுப்படுத்துவது என்பது சிக்கலக்குரியது என்றும், தொடர்ச்சியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த அறிக்கைகள் பயனற்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களே கிரிக்கெட்டை பாதுகாக்க முன்வர வாருங்கள்,

இவ்வாறு திருடப்படும் பணம் நாட்டு மக்களுக்கு சொந்தமானது என்றும், இவ்வாறு பணத்தை திருடும் போது முதுகெலும்பில்லாதவர்கள் போல் இருப்பதா  என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல ஜனநாயகம் என்ற பெயரில் 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நட்பு வட்டார நண்பர்கள்,

உறவுமுறைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட திருட்டு மோசடிகளாலையே நாடு வங்குரோத்தாகியதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துள்ளதால் இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி