1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு

ஏற்படக்கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

"வீட்டில் இருக்கக் வேண்டாம் என பொலிஸார் கூறுகின்றனர். கிரிக்கட் போட்டி தோற்றது பிரச்சினையல்ல, எங்களைத் திருடர்கள்னு சொல்றாங்க. கண்ணாடியில் பார்த்தால் யார் திருடன் என்று அமைச்சருக்கு தெரியும்.

"நீதிமன்றம் செல்லுங்கள். அமைச்சர் ஜப்பான் செல்வார்.  இந்த நாட்டை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். இதை நாங்கள் கைவிட மாட்டோம். நாங்கள் அவருக்கு விளையாட்டிற்கு செலவிட 2900 லட்சம் கொடுத்தோம். இந்த பணத்தை அவர் தனது நெருங்கியர்வளுக்கு செலவு செய்தார். இதை தணிக்கை செய்ய சொல்லுங்கள்."

"எங்கள் வருமானத்தில் 20% பணத்தை அவருடைய அமைச்சகத்திற்கு அனுப்புங்கள் என்று அவர் கடிதம் அனுப்பினார், நாங்கள் இல்லை என்று சொன்னோம், அவர் எங்கள் மீது கோபப்படுவதற்கு இதுவே முதல் காரணம்."

"நான் 21 ஆம் திகதி ஐசிசி போகிறேன். ஜனாதிபதியிடமும் நான் பேசுவேன்.

"அமைச்சரை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வோம், கின்னஸ் செல்லக்கூடிய சிறந்த அமைச்சர் அவர் என்று அவர் நினைக்கிறார்."

"அரசியல்வாதியால்தான் நாட்டில் கிரிக்கெட் தோற்றுப் போகிறது. ஒரு தனி மனிதன் பொய் சொல்கிறான். மற்றவர்கள் பார்க்காமல் ஆம் என்கிறார்கள்."

"ஐசிசி தடையை நீக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 50 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை."

"அமைச்சரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும். இந்த அதிகாரத்தை வைத்து விளையாட்டை வளர்க்க முடியாது.. இப்படி ஒரு அமைச்சர் வந்தால்."

"உலகக் கிண்ணம் நடக்கும் போது, ​​மக்களுக்கு அவர்களின் சம்பளம் பற்றிச் சொல்லப்படுகிறது. அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது எந்த நாட்டில் நடக்கிறது? பணிக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் பயப்படுகிறார்கள்."

"நாங்கள் துஷ்மந்த சமிர மற்றும் வனிந்துவையும் சேர்ந்து 15 பேரை அனுப்பினோம். அவர் எங்களிடம் உடற்தகுதிப் பரிசோதனையைக் கேட்டார். அந்த இரண்டு பெயர்களையும் வெட்டி அனுப்பச் சொன்னார்."

"நான் இந்தியாவுக்குப் போகவில்லை. நீங்கள் சொல்லும் கொழும்பு ஹோட்டலில் உள்ள சிசிடிவியைப் பாருங்கள். உங்களுக்கு மூளை இல்லையா. இவை இரவு நாடகங்கள்."

"மக்களுக்கு சாப்பாடு இல்லை... ஆனால் இலங்கையில் கிரிக்கெட் மட்டும் தான் பிரச்சனை."

"நான் மதுபானம் குடிக்கவில்லை. நேற்று பழச்சாறே குடித்தேன்."

“எனக்கு ஜனாதிபதி உறுதி வழங்கினால் நான் போய் பேசுவேன்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி