1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியல்வாதிகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கட் (SLC) அதிகாரிகளுக்கு இடையில் எவ்வாறான முரண்பாடுகள் எழுந்தாலும்

அவை தீர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“SLC மற்றும் அரசியல்வாதிகள் விளையாட்டுக்காகவும் வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் தங்கள் முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். முரண்பாடுகளின் விளைவாக பாதிக்கப்படப் போவது இலங்கையின் கிரிக்கெட் தான்” என்று அவர் கூறியுள்ளார்.

“சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விதித்துள்ள கிரிக்கெட் தடையால் நாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கும் நிலையில் உள்ளது.

“விளையாட்டு அமைப்புக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்தது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்குள் உள்ளக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது" என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி